
குறித்த 24 மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான ஆலோசனையை சட்ட மாஅதிபர் வழங்கியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நடராசா கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் அவர்களை இன்று பிற்பகல் யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் இன்று பிற்பகல் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வதற்கான ஆலோசனையை சட்ட மாஅதிபர் வழங்கியுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply