blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 25, 2014

தேயிலையில் கலந்து தங்கம் கடத்தி வந்த இலங்கை இளைஞர் கைது

இலங்கையில் இருந்து தேயிலைத்தூளில் தங்கத்தை கலந்து கடத்தி வந்த இலங்கை இளைஞர் ஒருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை, மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். இவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அவரது உடைமைகளை சோதனை செய்த போது, அங்கு தேயிலைத்தூள் இருந்தது. அதை பிரித்து பார்த்த போது அதில் தங்கத்தை பொடியாக்கி அதில் கலந்து கடத்திக்கொண்டு வந்தது தெரியவந்தது. தேயிலைத்தூளில் இருந்து ரூ.15 இலட்சம் மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றினார்கள்.

இதனையடுத்து இலங்கை இளைஞரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►