blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 25, 2014

வாகனங்களில் சத்தமாக பாடல் போட தடை

வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ரேடியோ மற்றும் பபல்களின் மூலம் சத்தமாக பாடல்களைப் போடவோ அல்லது சத்தமாக ஒலி எழுப்பவோ பொலிஸார் தடை விதித்துள்ளனர்.மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், இவ்வாறான குற்றங்களை மேற்கொள்பவர்களிடமிருந்து தண்டப் பணம் அறவிடப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

வாகனமொன்று பயணிக்கும் போதோ அல்லது அது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போதோ  பாடல்களைப் போட வேண்டுமாயின், அதில் பயணிப்பவர்கள் மாத்திரமே கேட்கக்கூடிய வகையில் அவை ஒலிபரப்பப்பட வேண்டும்.

இதனை மீறிச் செயற்படுபவர்களுக்கு 3000 ரூபா முதல் 5000 ரூபா வரையில் தண்டம் அறவிடப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►