blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 13, 2014

உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டில் பிரேஸில் அபார வெற்றி

உலகக் கிண்ண தொடரின் முதல் போட்டில் பிரேஸில் அபார வெற்றி20 ஆவது உலகக் கிண்ண கால்ப்பந்தாட்ட தொடர் பிரேஸிலின் சாவ் போலோவில் கோலககலாமாக ஆரம்பமானது.


இம் முறை உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின்குரோஷிய அணிக்கு எதிரான  முதல் லீக் போட்டியில் போட்டியை நடத்தும் நாடான பிரேஸில் 3-1 என்ற ரீதியல் அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

32 நாடுகள் பங்கேற்கும் உலகக்கிண்ண காலப்பந்தாட்டத் தொடரில் 64 போட்டிகள் நடைபெறவுள்ளன.

சாவ் போலோவில் நேற்று ஆரம்பமான முதல் போட்டியில் பிரேஸில் அணி வீரர் மார்செலோ போட்டியின் முதல் பாதியில் 11 வது நிமிடத்தில் ஒவ்ன் கோல்  அடித்து அதிர்ச்சியளித்தார்.

அதன் பின் போட்டியின் 29 நிமிடத்தில் பிரேஸில் அணியின் நட்சத்திர  வீரர் நெய்மர்  கோல் ஒன்றை பெற்று பிரேஸில் அணிக்கு ஆறுதலளித்தார்
இதன் மூலம் போட்டியின் முதல்பாதி  ஒன்றுக்கு ஒன்று என  சமநிலை வகித்தது.

இதையடுத்து போட்டியின் இரண்டாம் பாதியில் இரு அணிகளும்  கோல் பெறுவதுற்கு மும்முரமாக முயன்றன.

போட்டியின் 71 வது நிமிடத்தில் நெய்மர் பிரேஸில் சார்பாக இரண்டாவது கோலை பதிவு செய்து அணியை பலப்படுத்தினார்.

இந்நிலையில் போட்டியின் இறுதிநிமிடத்தில் பிரேஸில் அணி வீரர் ஓஸ்கர் கோல் ஒன்றை பெற்று பிரேஸில் அணியின்’ வெற்றியை உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம் பரேஸில் அணி குரோஷிய அணியை மூன்றுக்கு 1 என்ற ரீதியில் வெற்றிக் கொண்டது.

இதன் மூலம் பிரேஸில் அணி ஏ குழுவில் 3 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கின்றது.

பிரேஸில் ஐந்து தடவைகள்  கால்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►