தங்கொட்டுவ, லிஹிரியாகம பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல்
வல்லுவறவுக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டில் சிறுமியின் மாமா உறவுமுறை
உடைய ஒருவர் உட்பட இருவர் வியாழக்கிழமை (12) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக
கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.கைதானவர்கள், 37 மற்றும் 24 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறுவயதிலே தாய்,தந்தையரை பிரிந்த இச்சிறுமி சிறுவர் இல்லத்தில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறையில் ஹிரியாகம பிரதேசத்தில் உள்ள தனது பெரியம்மாவின் வீட்டுக்கு சிறுமி வந்துள்ளார்.
வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில், அங்கு வந்துள்ள சந்தேக நபர்கள் சிறுமி மீது இக்குற்றத்தைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட சிறுமியின் பெரியம்மா சம்பவம் தொடர்பில் கொஸ்வத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளனர்.
சிறுமி தற்போது வைத்திய பரிசோதனைக்காக மாராவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply