blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, June 13, 2014

சிலாபத்தில் பெண்ணொருவர் கழுத்து வெட்டிக் கொலை

சிலாபத்தில் பெண்ணொருவர் கழுத்து வெட்டிக் கொலைசிலாபம், பள்ளம பகுதியில் பெண் ஒருவர் கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதுகுறித்து இரவு 7.15 அளவில் கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துசென்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன் பிரகாரம் பிரதேச வீடொன்றினுள் இருந்து வெட்டப்பட்ட நிலையில் கடுமையான வெட்டுக் காயங்களுடன் விழுந்துகிடந்த பெண்னண அயலவர்களின் உதவியுடன் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தபோது, அவர் உயிரிழந்திருந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்னறனர்.

பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த ஒருவரே கூரான ஆயுதத்தினால் அவரின் கழுத்தை வெட்டியுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
முந்தல் அங்குனவில பகுதியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பியோடியுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை பள்ளம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►