
முதற்கட்டமாக கங்கை ஆற்றில் உமிழ்நீரை உமிழ்ந்தாலோ, குப்பை உள்ளிட்ட கழிவு பொருட்களை வீசினாலோ 3 நாட்கள் சிறை அல்லது ரூ.10,000 அபராதம் விதிப்பதற்கான சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி அளித்த பேட்டி ஒன்றில், கங்கை நதியை தூய்மைப்படுத்துதல் மத்திய அரசின் முன்னுரிமையாகும் என்று கூறியிருந்தார்.
அதற்காக மற்ற நதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது என்பது அர்த்தம் கிடையாது என்ற அவர், முதலில் கங்கையை தூய்மைப்படுத்தி, நதி தூய்மைக்கான முன்னுதாரணமாக கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply