blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 11, 2014

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் குற்றச்சாட்டு நிராகரிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் ராசகுமாரன் நேற்று வெளியிட்டிருந்த கருத்தை இன்று இராணுவ பேச்சாளர் நிராகரித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு கருத்து வெளியிடும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பான கேள்வி ஒன்று இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரியவிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய அவர், பல்கலைக்கழக விரிவுரையாளரின் கருத்தை நிராகரித்ததுடன், மாணவர்களுக்கு உதவி வழங்குவதைத் தவிர இராணுவம் எந்த செயற்பாடுகளையும் பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►