
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்கள், மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் ஊடாக கடந்த திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த 46 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அன்று உத்தரவிடிருந்தார்.
இதனிடையே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய மீனவர்களையும் உடன் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.
இதற்கமைவாக சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து கடற்றொழில் திணைக்களத்தினால் மன்னார் நீதிமன்றிற்கு அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த அறிக்கையின் பிரகாரம் குறித்த 46 இந்திய மீனவர்களும் இன்று (11.06.2014) காலை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
46 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டபோதும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9 படகுகள் மற்றும் வலைகள் விடுவிக்கப்படவில்லை. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply