blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Wednesday, June 11, 2014

இலங்கையில் இடம்பெற்றதாக கூற படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்குழுவுக்கான வீசா - நாடாளுமன்றத்தில் ஆய்வு

இலங்கையில் இடம்பெற்றதாக கூற படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச குழுவுக்கு, வீசா அனுமதி வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இது தொடர்பான யோசனையை நாடாளுமன்ற செயலாளரிடம் முன்வைத்துள்ளனர்.

இதேவேளை இலங்கை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ள சர்வதேச விசாரணைக்குழுவுக்கு வீசா வழங்கப்படாவிட்டாலும், அதன் விசாரணை நடவடிக்கைகள் தொடரும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை எமது செய்திப்பிரிவிக்கு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில்,  அரசாங்கம் தற்போது அனைத்து பக்கங்களிலும் இறுகியுள்ள நிலையில், தற்போது தமது பிரச்சினைக்குள் எதிர்கட்சிகளையும் இணைத்துக் கொள்ள முற்படுவதாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, விசாரணைக்குழுவுக் வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு முன்னர், அது தொடர்பான நிலைப்பாட்டை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான விசாரணைக்குழு தொடர்பில் நேற்றையதினம் மனித உரிமைகள் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அரைவாசிக்கும் குறைவான அங்கத்துவர்களின் ஆதரவில் நிறைவேற்றப்பட்ட அமெரி;க பிரேரணையின் அடிப்படையிலான இந்த விசாரணைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, ஜெனீவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநதி ரவிநாத் ஆரியசிங்க அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►