பதுளை மாவட்டத்தின் விசேட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று இடம்பெற்ற போது அவர் இந்த பணிப்புரையை விடுத்திருந்தார். பதுளை மாவட்டத்தில் தொழில்நுட்ப கல்லூரிகளில் தமிழ் மொழி மூல தொழில்நுட்ப பாடங்கள் நடைபெறுவதில்லை என்று இந்த கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகபெரும, தமிழ் மொழி மூல போதனா ஆசிரியர்கள் இல்லை என்பதால் இந்த பாடநெறிகளை தமிழில் நடத்த முடியாதிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தமிழ் மொழி மூல தொழில்நுட்ப போதனா ஆசிரியர் பதவி நியமனத்துக்கான விளம்பரங்கள் ஊடகங்கள் வாயிலாக செய்யப்பட்ட போதும், அதற்கான விண்ணப்பங்கள் கிடைக்கவில்லை என்றும் அமைச்சர் கூறி இருந்தார். இதனைத் தொடர்ந்து பதில் வழங்கிய ஊவா மாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார், ஆசிரியர்கள் இல்லை என்பதற்காக தொழில்நுட்ப கற்கை நெறிகளை வழங்காதிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.
இதற்கு மாற்று நடவடிக்கையாக பதுளை மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற தமிழ் இளைஞர்களை தெரிவு செய்து, வெளிமாவட்டங்களுக்கு பயிற்சிகளுக்கு அனுப்புவதன் ஊடாக, அவர்களை கொண்டு தமிழ் மொழி மூல தொழில்நுட்ப போதனைகளை மேற்கொள்ள முடியும் என்று அரவிந்தகுமார் அறிவுறுத்தினார்.
அத்துடன் ஊவாமாகாணத்தில் தொழில்நுட்ப அதிகாரியாகவோ, தொழில்நுட்ப உதவியாளராகவோ ஒரு தமிழரேனும் இல்லை என்பதையும் அரவிந்த்குமார் சுட்டிக்காட்டினார். இதனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு பணிப்புரை வழங்கினார்.
அதே நேரம் தமிழ் பாடசாலைகளில் தொழில்நுட்ப நிலையங்களை உருவாக்க வேண்டும் என்பதையும் ஏ.அரவிந்த்குமார் சுட்டிக்காட்டிய நிலையில், அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கல்வி அமைச்சர் பந்துலகுணவர்தன மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திரராஜபக்ஷ ஆகியோருக்கு ஜனாதிபதி பணிப்புரைவிடுத்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply