blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, June 22, 2014

விண்வெளி பயணத்துக்கு அதிக ஆர்வம் காட்டும் சீனர்கள்

1bffb22e-29af-41d2-8260-c6f42f1837f4_S_secvpfஒரு காலத்தில் விமானத்தில் ஏறி பயணிப்பதற்காக மக்கள் ஏங்கினர். வாழ்நாளில் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்துவிட வேண்டும் என்பது பலரின் ஏக்கமாக இருந்தது. ஆனால் இன்று விமானப்பயணம், நடுத்தர மக்களுக்கும் ஏன், ஏழைகளுக்கும்கூட சில நேரங்களில் கைகூடுகிறது.
இன்றைய மனிதனின் அடுத்தகட்ட இலக்காக விண்வெளிப்பயணம் அமைந்துள்ளது. இதை புரிந்து கொண்ட சில நிறுவனங்கள், மனிதர்களை சில நிமிட நேரம் விண்வெளியில் பறக்கவைப்பதற்காக விண்வெளி சுற்றுலாவை ஏற்பாடு செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்களில் இந்தியர்கள் சிலரும் தங்கள் பெயரை பதிவு செய்துள்ள நிலையில், சீனாவில் உள்ள பெரும் பணக்காரர்கள் விண்வெளி பயணத்துக்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்றில் இருந்து அவர்கள் டிக்கெட் வாங்கி வருகிறார்கள்.

அந்தவகையில் இந்த நிறுவனத்திடம் இருந்து 305 சீனர்கள் டிக்கெட் வாங்கி வைத்துள்ளனர். 5 அல்லது 6 நிமிட விண்வெளி பயணத்துக்கான டிக்கெட்டின் விலை 96 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.57 லட்சத்து 60 ஆயிரம்) ஆகும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►