இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்ட பாரிய அளவான சிவப்பு சந்தன மரங்களை இந்திய சுங்க புலனாய்வு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.சென்னை துறைமுகத்தில் இருந்து கடந்த மூன்று வாரங்களில் மாத்திரம் 60 டன் சந்தன மரங்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பெறுமதி 27 கோடி இந்திய ரூபாய்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இவை கப்பல்களில் அனுப்பி வைக்கப்படவிருந்தன.
இவை கிரனைட் மற்றும் தரி உற்பத்திகள் என்று தெரிவித்து, கப்பல் கொள்களன்களில் ஏற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply