முல்லை. அலம்பில் பகுதியில் சைக்கிளிலிருந்து விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.வேகமாக சைக்கிளை ஓட்டிச்சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த சிறுவன் சுப்பிரமணியம் குபேந்திரன் (வயது 9) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற சிறுவன் வேகத்தை கட்டுப்படுத்தமுடியாது விபத்துக்குள்ளாகியுள்ளான். இதனால் நெஞ்சுப்பகுதியில் பலத்த காயமடைந்து முல்லை. வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டான்.
மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் நேற்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply