சிறுவர்களை தொழிலாளிகளாக வைத்திருக்கும் முதலாளி வர்க்கத்தினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.சிறுவர்களுக்குரிய சமூக பாதுகாப்பு வழங்குதலும் மற்றும் சிறுவர் தொழிலாளர்களை எமது சமூகத்திலிருந்து இல்லாதொழிப்பதே இவ்வருடத்திற்கான தொனிப்பொருளாகும்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு பரிந்துரை எண் 202 க்கு அமைவாக சிறுவர்களுக்குரிய சமூகப் பாதுகாப்பினை நீடித்தல்- சிறுவர்களின் உணர்வினைப் புரிந்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் என்பவற்றை நோக்காக கொண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பு உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை அனுஷ்டிக்கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2002ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 12ஆம் திகதியை உலக சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply