blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 12, 2014

பொலிவியாவில் வாழ்ந்த 123 வயது முதியவர் மரணம்

92f5b308-550e-4d3e-b025-4592c098bea8_S_secvpfபொலிவியா நாட்டில் வாழ்ந்த வயது முதிர்ந்த நபர் என்று கருதப்படும் கேர்மெலோ ஃப்லோரஸ், கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்தார். அவரது ஞானஸ்நான சான்றிதழின்படி, கேர்மெலோ ஃப்லோரஸ்சின் பிறந்த தேதி 16-7-1890 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், பொலிவியா நாட்டில் 1940-ம் ஆண்டுக்கு பின்னரே பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்ததால் இவரது வயதை சட்டப்படி நிரூபிக்கும் வேறு எவ்வித சான்றுகளும் இவரிடம் இல்லை என்று கூறப்படுகிறது.

1932-35ம் ஆண்டுகளுக்கிடையே பொலிவியா-பரகுவே நாடுகளுக்கிடையில் நடந்த சாக்கோ போரில் பங்கேற்றதாக கூறிவந்த இவர், பொலிவியாவில் வாழும் ஐமாரா இந்தியர் என்ற வம்சாவழியை சேர்ந்தவர் என தெரிகிறது.

டிட்டிக்காக்கா ஏரிக்கரையில் உள்ள லா பெஸ் பகுதியின் குக்கிராமம் ஒன்றில் வசித்து வந்த இவர், சர்க்கரை நோய் பாதிப்பால் கடந்த திங்கட்கிழமை மரணம் அடைந்ததாக இவரது 70 வயது மகன் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சாதனை பதிவின்படி, 1997ம் ஆண்டில் மரணமடைந்த ஜீன்னே கால்மெண்ட் என்ற பிரெஞ்சுப் பெண் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் என 122 வயது வரை வாழ்ந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மரணமடைந்த கேர்மெலோ ஃப்ளோரெஸ் உலகில் அதிக காலம் வசித்த நபரா? என்பதை நிரூபிப்பதற்கு போதுமான ஆதாரம் ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►