யாழ்.நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேற்பகுதியில் இருந்து ஆள் இல்லாமல் உளவு பார்க்கும் புகைப்படக்கருவியுடன் கூடிய சிறிய விமானத்தை பொலிஸாரால் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் மேற்பகுதியில் குறித்த விமானம் இருப்பதை விடுதியின் ஊழியர் அவதானித்துள்ளார்.அதன் பின்னர் அவ்விடயம் தொடர்பாக விடுதியின் உரிமையாளருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த விமானம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட விமானம் தற்பொழுது யாழ். பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும் யாழ்.பொலிஸார் இவ்விடயம் தொடர்பாக எவ்விதமான தகவல்களையும் வெளியிடவில்லை. எனினும் குறித்த விமானம் சிறியது எனவும் அதில் சிறிய புகைப்படம் எடுக்கும் கருவி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த விமானம் உளவு பார்க்கும் நோக்கில் செலுத்தப்பட்டு இயந்திரக் கோளாறினால் பழுதடைந்து வீழ்ந்துள்ளதா என்பது தொடர்பான தகவல்கள் பொலிஸாரால் சேகரிக்கப்பட்டு வருவதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 3, 2014
யாழில். ஆளில்லாமல் உளவு பார்க்கும் சிறிய விமான புகைப்படக் கருவி
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
காலி – கிங்தோட்டை பகுதியிலுள்ள கைத்தொழிற்சாலையொன்றில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
-
பிரதான போதைப்பொருள் கடத்தல் குழுவொன்றின் தலைவர் மெக்ஸகோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய, கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ALS பனிக்கட்டிக் குளியல் சவாலுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேல் மாகாண சபையின் உறுப்ப...
No comments:
Post a Comment
Leave A Reply