தமிழக - இலங்கை மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண, சென்னையிலும்,
கொழும்பிலும், நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 'மீண்டும்,
அடுத்த கட்ட பேச்சுக்கு ஏற்பாடு செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே,
பிரதமர் மோடி பதவியேற்பில், பங்கேற்ற இலங்கை அதிபர் ராஜபக் ஷே நல்லெண்ண
அடிப்படையில், 14 தமிழக மீனவர்கள் விடுவிக்க உத்தரவிட்டார். இரு
நாடுகளுக்கு இடையேயும் சாதகமான சூழல் வந்துள்ளதால், மீனவர் பிரச்னைக்கு
தீர்வு வரும், என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்க்காத வகையில்,
இலங்கை கடற்படை, எல்லை தாண்டி வந்ததாக, 33 தமிழக மீனவர்களை சிறை பிடித்தது,
தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது, மீனவர்
பிரச்னைக்கு தீர்வு காண்பதில் முட்டுக்கட்டையாக அமையும்' என, பல்வேறு மீனவ
அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
பெயர் குறிப்பிட
விரும்பாத மீனவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நல்லெண்ண அடிப்படையில்,
14 தமிழக மீனவர்களை இலங்கை விடுவித்தது. தமிழக சிறையில் உள்ள, 25 இலங்கை
மீனவர்களை, இந்திய அரசு விடுவிக்கும் என, இலங்கை அரசு எதிர்பார்த்தது.
அவ்வாறு நடக்காத அதிருப்தியில், தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது
செய்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை
விடுத்தால் சிக்கல் தீரும்; அடுத்த கட்ட பேச்சும் சுமுகமாக நடக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply