blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 28, 2014

உலக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்; இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பம்

உலக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்; இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பம்பிரேசிலில் நடைபெற்று வரும் 20 ஆவது உலக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில்  சிறந்த 16 அணிகள் பங்கேற்கும்  இரண்டாம் சுற்றுப் போட்டிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.


இம்முறை உலகக்கிண்ண போட்டிகளை நடத்தும்  பிரேஸில் இன்று   நடைபெறும்  முதல் போட்டியில் சிலியை எதிர்த்தாடவுள்ளது.

சொந்த மண்ணில் உள்ளூர் இரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் பிரேஸில் அணி இறுதி வரை வெற்றியை விட்டுக்கொடுக்காது விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பெலோ ஹொரிஸொன்டே மினெய்ரோ மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி   இலங்கை நேரப்படி இன்று இரவு 9.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை உலகக்கிண்ண  கால்பந்தாட்ட வரலாற்றில் சிலிக்கு எதிராக விளையாடிய மூன்று போட்டிகளிலும்  பிரேசில் அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்கதக்கது.

எனினும் இம்முறை உலக்கிண்ண போட்டிகளில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய  ஸ்பெயின் அணியை வெற்றிக் கொண்ட  சிலி அணி இன்றைய போட்டியில் கடும் சவாலை விடுக்கும் நம்பப்படுகின்றது.

காலிறுதிக்கு முன்னைய சுற்றான சுப்பர் 16 அணிகளின் சுற்றின்  இரண்டாவது  போட்டியில்  கொலம்பியாவும் உருகுவேயும் மோதவுள்ளன.

இந்தப் போட்டி ரியோடி ஜெனீரோ மரக்கானா மைதானத்தில் நாளை அதிகாலை 1.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

கொலம்பியாவும் உருகுவேயும் இதற்கு முன்னர் 38 தடவைகள் சந்தித்துள்ளதுடன் அவற்றில் 18 தடவைகள் கொலம்பியா வெற்றிப் பெற்றுள்ளதுடன் உருகுவே அணி 11 தடவைகள் வெற்றிப் பெற்றுள்ளது..
அத்துடன் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிகள் 9 தடவைகள் சமநிலையில்  முடிவடைந்துள்ளன.

எவ்வாறாயினும் சிறந்த கால்பந்தாட்ட அணிகள் என்ற பெயருக்கு பாத்திரமான ஸ்பெயின்  இங்கிலாந்து இத்தாலி போர்த்துக்கல் உள்ளிட்ட  பல ஐரோப்பிய அணிகளும், கானா, கெமரூன் ஆகிய ஆபிரிக்க அணிகளும் லீக் சுற்றிலேயே வெளியேறியுள்ளன.

ஆசியாவிலிருந்து பங்கேகேற்ற  மூன்று அணிகளான ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளாளும்   அடுத்த சுற்றுக்கு முன்னேறமுடியவில்லை  என்பது குறிப்பிடத்கதக்கது

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►