
நாடுகளின் பெயர், மொழி, நிலப்பரப்பு, மலை, கடல், கிரகங்கள், மக்கள் தொகை என எந்த கேள்விகளுக்கும், அதிரடியாக பதில் அளித்து அசத்துகிறான். இதனால், இவனை, ‘கூகுள் பாய்’ என, செல்லமாக அழைக்கின்றனர்.
அவனது அசாத்திய திறமையை பார்த்த அவரது தந்தை சதீஷ் சர்மா ‘கூகுள் பாய் அகாடமி ஃபார் எக்ஸலென்ஸ்’ என்ற பெயரில் பயிற்சி அகாடமி ஒன்றை ஹரியானாவின் பஞ்ச்குலாவில் துவங்கியுள்ளார். இங்கு, அதிசய சிறுவன் கௌடில்யா தன் வயதை ஒட்டிய சிறுவர்களுக்கு ஞாபக சக்தி மற்றும் யுக்திகள் குறித்து பயிற்சி அளிக்கிறான். அவர்களுக்கு கல்லூரி பேராசிரியரை போல் விளக்கமும் அளிக்கிறான்.

இதில் சேரும் மாணவர்கள், புத்திசாலித்தனத்தை நிரூபிக்கும் ஐ.க்யூ டெஸ்ட், கேபபிலிட்டி மற்றும் இன்ட்ரெஸ்ட் லெவல்ஸ் ஆகிய தேர்வுகளை கடந்தே அட்மிஷன் பெற முடியும்.
அப்படி, அந்த தேர்வுகளில் வெற்றி பெற முடியாதவர்களுக்கும் விவாதம், புத்திக்கூர்மை, வானியல், சாட்டிலைட் சயின்ஸ், புவியியல், கணக்கு, ஆங்கில இலக்கணம், ஹிந்தி இலக்கணம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்கிறார்கள்.
6 வயது சிறுவனான கூகுள் பாய் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை போலவே அதீதமான ஐ.க்யூ லெவலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment
Leave A Reply