இன,
சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் பாரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக
பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.பேருவளை மற்றும் அளுத்கம சம்பவங்கள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனம், சமூகம் என்று பாராது, அனைவரும் இந்த நாட்டு மக்களே என்ற ஜனாதிபதியின் கொள்கையினை தொடர்ந்தும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்பை இந்த நாட்டிலுள்ள சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளிலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த பிரச்சினையுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்களுக்கான நிவாரணங்களும், இழப்பீடுகளும் விரைவில் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply