எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 24, 2014
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது பிரேஸில்
உலகக் கிண்ண காலப்பந்தாட்ட தொடரில் கமரூன் அணியை வெற்றிக் கொண்டதன் ஊடாக அடுத்த சுற்றுக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் பிரேஸில் அணி கமரூன் அணியை 4-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்டது.
போட்டி ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் பிரேஸில் வீரர் பாலின்ஹோவின் கோல் அடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது.
தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேஸில் அணி சார்பில் நட்சத்திர வீரர் நெய்மர் போட்டியின் 17ஆவது நிமிடத்தில் போட்டியின் முதல் கோலை தனது அணி சார்பில் பதிவு செய்தார்.
இதையடுத்து பதிலுக்கு கமரூன் அணி போட்டியின் 26 அவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றுக்கொண்டது.
போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் நெய்மர் அற்புதமான கோல் ஒன்றினை பிரேஸில் சார்பில் பெற்று அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக அதிகரித்தார்.
ஆகவே ஆட்டத்தின் முதல் பாதியில் 2-1 என்ற ரீதியில் பிரேஸில் முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதியிலும் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டிய பிரேஸில் சார்பில் பிரெட் 49 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலைப் பெற்றார்.
போட்டியின் 86ஆவது நிமிடத்தில் பிரேஸில் வீரர் பெர்னாடின்ஹோ மற்றுமொரு கோலைப் பெற பிரேஸிலின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இதேவேளை உலகக்கிண்ண காலப்பந்தாட்டப் போட்டிகளில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் நெதர்லாந்து அணி சிலி அணியை வீழ்த்தி பி பிரிவில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் சிலி அணியை வெற்றிக் கொண்டதன் மூலம் உலகக்கிண்ண காலப்பந்தாட்டப் போட்டிகளில் தொடரச்சியான மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் மெக்ஸிகோ மற்றும் குரோஷிய அணிகளுக்கிடையிலான போட்டியில் மெக்ஸிகோ அணி 3-1 என்ற ரீதியில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் நடப்புச் சம்பியன் ஸ்பெயின் 3-0 என்ற ரீதியில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யவென இன்று (10) தொடக்கம் விசேட வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் திணை...
-
இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் தெரிவதாக வெளியான செய்திகளை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
-
குருநாகல் அம்பகொலவெவ பகுதியில் கடத்தப்பட்ட நான்கு வயது சிறுமி தமாரா ஹோசாலி நெரியாவ பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
-
கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தின் அனைத்து கல்விசார் நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக கிழக்கு பல்...
No comments:
Post a Comment
Leave A Reply