திருகோணமலை – வவுனியா பிரதான வீதியின் மகதிவுள்வெவ குளத்துப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.குறித்த பகுதியில் டிப்பர் வாகனம், கெப் ஒன்றுடன் மோதியதில் இவர்கள் இன்று காலை காயமடைந்ததாக எமது செய்தியாளர் கூறினார்.
இவர்கள் மகதிவுள்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இருவர் மேலதிக சிகிச்சைககளுக்காக திருகோணமலை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிண்ணியா பழைய வைத்தியசாலை சந்தி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனமும், சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply