
சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கமைய, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமாரினால் இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும், இந்த மீனவர்களின் 03 படகுகள் விடுவிக்கப்படவில்லை என கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட பணிப்பாளர் என் கணேசமூர்த்தி குறிப்பிட்டார்.
இந்த மீனவர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
மீனவர்களை பொறுப்பேற்ற யாழ்.கடற்றொழில் திணைக்களத்தினர், அவர்களை யாழ். இந்திய துணைத் தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த மீனவர்களை இந்தியாவிற்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply