புலிகளுக்கும் பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக
தங்காலை பாதாள உலகக் குழுவிற்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான
தொடர்பு குறித்த பயங்கரவாதத் தடைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தெற்கின்
முக்கிய பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான பள்ளக்குடாவே
உக்குவாவிடமிருந்து மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி காரணமாகவே இவ்வாறு
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில்
தங்காலை நகரில் பஸ் நடத்துனர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
கொல்லப்பட்டமை ஆர்மி அமில என்னும் பாதாள உலகக் குழு உறுப்பினர் மீது
துப்பாக்கிச் சூடு நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன
உக்குவாவிற்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உக்குவா பயன்படுத்திய கைத்துப்பாக்கியில் புலி என எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புலிகளின் புலனாய்வுப் பிரிவினர் பயன்படுத்தும் கைத்துப்பாக்கியே இதுவெனத் தெரிவி;க்கப்படுகிறது.
இந்த கைத்துப்பாக்கி எவ்வாறு உக்குவாவிற்கு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.நண்பர்
ஒருவரிடமிருந்து துப்பாக்கியை கொள்வனவு செய்ததாக உக்குவா
தெரிவித்துள்ளார். எனினும் இந்த விடயம் குறித்து பொலிஸார் விரிவான
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply