இலங்கைக்
கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 78 பேரை உடனடியாக
விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் முதலாவது ஒன்றிணைந்த கூட்டத் தொடருக்கு இணங்க இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தரப்பில் வெளியான டுவிற்றர்
தகவலில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து தமது மகிழ்சியினையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவினால்
தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய இலங்கை மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அந்த
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர்,
கைது செய்யப்பட்ட 46 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றறம் உத்தரவிட்டுள்ளது.
நேற்றும் நேற்று முன்தினமும் 9 மீன்பிடி படகுகளில் வந்த 46 இந்திய மினவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை இன்று மன்னார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 15 வயதுக்குட்ட சிறுவனை ஏனைய கைதிகளுடன் தடுத்துவைக்காது சிறுவர் பிரிவில் தடுத்துவைக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது செய்வது தொடர்பாக ஆராயுமாறு, இந்தியாவின் புதிய வெளிவிவகாரத் துறை அமைச்சர் சுஸ்மா ஷிவராஜ் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment
Leave A Reply