
இது தொடர்பாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இது இடம்பெற்றுள்ளதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலில் இருந்தவர்கள் தீயை அணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க விஷேட பொலிஸ் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சம்பவ இடத்திற்கு இன்று சென்றிருந்தார்.
மத்திய மாகாணச் சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்த கருத்து:-
‘இவ்வாறான சம்பவங்கள் தொடர்கின்றது.
வரலாற்றில் இடம்பெறாத விடயங்களே இன்று நாட்டில் இடம்பெறுகின்றது.
இலங்கையில் இந்த பிரச்சனைகள் உள்ள பிரதேசங்களுக்கு தீர்வு வழங்க இதுவரையில் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை
ஆகவே இதனுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கினால் மறுபடியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பதே எனது கருத்தாகும்.’
தெஹிவல-கல்கிஸ்ஸ மேயர் தனசிறி அமரதுங்கவும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.
தெஹிவல – கல்கிஸ்ஸ மாநகரச் சபை மேயர் தனசிறி அமரதுங்க தெரிவித்த கருத்து:-
‘அன்று தொடக்கம் இன்று வரை தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் ஆகியோர் ஒற்றுமையுடனேயே வாழுகின்றோம்.
ஒரு தாயின் பிள்ளைகள் போன்று பிரச்சனையின்றி வாழ்கின்றோம். அளுத்கம பகுதியில் பிரச்சனைகள் ஏற்பட்டப் போது தெஹிவல – கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற நாங்கள் இடமளிக்கவில்லை.
மேயர் என்ற வகையில் இது எனது கடமையாகும். ஆகவே எதிர்காலத்திலும் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக செயற்படுவோம்.’
No comments:
Post a Comment
Leave A Reply