
ஈராக் மற்றும் சிரியாவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை இணைத்து இந்த நாடு உருவாக்கப்பட்டுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் அபுபக்கர் அல் பஃஹ்டாடி என்பரை தமது தலைவராகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, ஈராக்கின் திக்ரித் நகரில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் தொடர்ந்தும் மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள திக்ரித் நகரை மீளக் கைப்பற்றும் நடவடிக்கையை ஈராக்கிய அரச படையினர் தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி திக்ரித் நகரை கைப்பற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பிராந்தியத்தின் பல பகுதிகளை தம்வசப்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply