யு.எஸ்.-கலிபோர்னியாவில் சமர் ஹொலிங்வேர்த் மற்றும் மிசேல் லோபஸ்
தம்பதியினருக்கு ஜேம்சன், ஜக்சன் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.ஜேம்சன் ஒரு கண்ணுடன் பிறந்துள்ளான். ஜக்சன் உருக்குலைந்த பாதம் ஒன்றுடனும் பார்வை முற்றிலும் அற்ற நிலையிலும் பிறந்துள்ளான்.
பெற்றோர் இருவரும் தங்கள் இரட்டைக் குழந்தைகளிற்கு சிறந்த மருத்துவ பராமரிப்பை வழங்குவதற்காக வேறு பட்ட வைத்திய நிபுணர்கள் சந்தித்து வருகின்றனர்.
ஒரு உட்சுரப்பியல் நிபுணர், மூன்று வித்தியாசமான கண் நிபுணர்கள் ஆகிய வைத்திய நிபுணர்களை பார்ப்பதற்காக அங்குமிங்கும் அலைந்து திரிய வேண்டியதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் வேலையற்ற நிலையில் இருப்பதால் நிதி நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியர்கள் இது Anophthalmia எனப்படும் ஒரு வகை நோய் எனவும் 100,000-ல் 3-பேர்களிற்கு பிறப்பில் உண்டாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வைத்திய செலவிற்கான நதி சேகரிக்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply