ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைமையில் நியமிக்கப்பட்ட சர்வதேச
விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிடம், பிரித்தானியா
கேட்டுக்கொண்டுள்ளது.இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு, கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கின் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
"பொதுநலவாய அமைப்பின் உறுப்பினர்கள் என்ற ரீதியில் இலங்கையும், பிரித்தானியாவும் அமைப்பின் கொள்கைளை பின்பற்ற வேண்டும். ஜனநாயகத்திற்கான கடப்பாடு, மனித உரிமைகளை மதித்தல், சட்டவாட்சி, நிலையான அபிவிருத்திக்கான கடப்பாடு, சிறந்த நிர்வாகம், சமத்துவம் என்பன பொதுநலவாய அமைப்பின் கொள்கைகள் ஆகும். இந்தக் கடப்பாடுகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய அமைப்பு என்பவற்றில் காணப்படுகின்றன. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைமையில் கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். அத்துடன் மோதல்களில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயம் வழங்கப்படல் வேண்டும் என்பது உட்பட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு தொடர்ச்சியாக கோரியுள்ளோம்."
No comments:
Post a Comment
Leave A Reply