முஸ்லிம்களுக்குச் சொந்தமான மிகப்பெரிய ஆடை மையமான 'நோலிமிட்'டின் பாணந்துறை நிலையம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாதோரினால் தீயிடப்பட்டது.நான்கு தீயணைக்கும் இயந்திரங்கள் தீயை அணைக்கப் போராடி வந்த போதிலும் அது சாத்தியமற்று காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன.
'நோலிமிட்' நிறுவனத்தின் மிகப் பெரிய களஞ்சியசாலை மற்றும் விற்பனை மையம் இதுவே எனவும் மேலும் அப்பிரதேசத்தில் மிகப்பெரிய ஆடை மையமும் இதுதான் என்றும் கூறப்பட்டது.
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானாசார தேரரின் பகிரங்க உரைகளில் இந்த நிறுவனத்தை இலக்கு வைத்து குரூர வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது என சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
No comments:
Post a Comment
Leave A Reply