நாட்டின் தலையெழுத்தை, சிறு குழுவினரிடம் கையளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வலியுறுத்தியுள்ளார்.மத்தல சர்வதேச விமான நிலையம் மற்றும் மாகம்ருகுணுபுர மஹிந்த ராஜபக்ஸ துறைமுகம் என்பவற்றில் அமைப்பட்டுள்ள எரிபொருள் களஞ்சிய கட்டமைப்புக்களை நேற்று திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டார்.
ஜனாதிபதி தெரிவித்த கருத்து :-
“சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என வேறுபட்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நாங்கள் ஒன்றிணைய வேண்டும். நாம் ஒருவரை ஒருவர் கௌரவிக்க பழக வேண்டும். அன்று தமிழ், சிங்களம் முஸ்லிம் என அனைவரையும் பயங்கரவாதிகள் கொலை செய்தனர். அன்று ஆர்ப்பாட்டம் செய்யாதவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். ஹர்த்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்த சிறிய சம்பவத்திற்கு பாரிய ஹர்த்தாலை முன்னெடுக்கின்றனர். ஒரு இனத்தை மற்றுமொரு இனம் மிதிப்பதை அனுமதிக்க முடியாது. இதனை நான் தெளிவாக கூறிக் கொள்கின்றேன். சில சம்பவங்கள் இடம்பெறுகின்றது. அவற்றுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளேன். இனவாதத்தை தூண்டிவிட இருதரப்பிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை இரு தரப்பினரும் நிறுத்த வேண்டும். நாட்டின் தலையெழுத்தை ஒரு சிறு தரப்பினரிடம் செல்வதனை அனுமதிக்க முடியாது. இது அனைவரினதும் கடமையாகும்.”
No comments:
Post a Comment
Leave A Reply