blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 23, 2014

அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு தற்காலிக பாதுகாப்பு வீசா வழங்கும் நடைமுறை மீண்டும் அமுல்


அவுஸ்திரேலியாவில் அகதிகளுக்கு தற்காலிக பாதுகாப்பு வீசா வழங்கும் நடைமுறை மீண்டும் அமுலுக்குஅகதிகளுக்கான தற்காலிக பாதுகாப்பு வீசாக்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.


அகதி அந்தஸ்து நிரூபிக்கப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிரந்திர வீச்சாக்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்திருந்தது.

இதற்கமைய வருடமொன்றுக்கு 2,773 நிரந்தர வீசாக்கள் மாத்திரமே அகதிகளுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் இந்த கொள்கைத் தவறானது  என அந்நாட்டு உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எதிர்ப்பார்க்கப்பட்ட ஒன்றென அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அகதிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த தற்காலிக வீசா நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக  அவர் குறிப்பிட்டதாக அவுஸ்திரேலிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்காலிக பாதுகாப்பு வீசாவைப் பெறும் ஒருவர் அகதி அந்தஸ்து பரிசீலனை செய்யப்படும் வரை அவுஸ்திரேலியாவில் மூன்று வருடங்கள் தங்கியிருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►