blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, June 23, 2014

அளுத்கம – பேருவளை சம்பவங்கள் தொடர்பில் 15 பொலிஸ் குழுக்கள் நியமனம்

அளுத்கம – பேருவளை சம்பவங்கள் தொடர்பில் 15 பொலிஸ் குழுக்கள் நியமனம்அளுத்கம – பேருவளை மற்றும் வெலிபன்ன ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக மேலும் 15 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.


குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்புப்  பிரிவு ஆகியவற்றின் ஐந்து குழுக்கள் ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தும்  நோக்கில் மேலும் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் பொலிஸ் குழுக்களின் எண்ணிக்கை  20 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி கைது செய்யப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர்,  மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►