கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த 48 வயது மதிக்கத்தக்க நபரிடமிருந்து மயக்கமருந்தை பயன்படுத்தி தங்கச் சங்கிலியை திருடர்கள் அபகரித்துள்ளனர் என பளை புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட அந்நபர் யாழ் கொக்குவிலை சேர்ந்த குருநாதபிள்ளை பகீரதன் என தெரிய வந்துள்ளது.
மயங்கிய நிலையிலேயே குறித்த நபர் பளை புகையிரத நிலையம் வரை பயணித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் புகையிரத நிலைய அதிகாரிகள் விசாரித்த போது கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து புறப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் தன்னுடன் நன்றாக கதைத்த சிலரே தன்மீது மயக்கமருந்தை தெளித்து தனது சங்கிலியை திருடி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பளை புகையிரத நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கியதும் புகையிரத அதிகாரிகள் அடுத்த பயணத்துக்காக புகையிரதத்தை தயார் செய்த போது அங்கு ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அவருக்கு முதலுதவிச் சிகிச்சை வழங்கினோம் என சம்பவம் தொடர்பாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply