blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, June 17, 2014

போராடி தோல்வியை தவிர்த்தது இலங்கை


முதல் டெஸ்ட்  சமநிலையில் நிறைவு; போராடி தோல்வியை தவிர்த்தது இலங்கைஇலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் ​போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.


லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் வெற்றியிலக்கான 390 ஓட்டங்களை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 9 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை பெற்றிருநத வேளையில் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இந்நிலையில் இங்கிலாந்து தனது முதல் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 575 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது. அணியின் துடுப்பாட்டத்தில் ஜோசப் ரூட் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை குவித்தார். 

பந்து வீச்சில் நுவன் பிரதீப் 4 விக்கெட்டுக்களையும், ரங்கன ஹேரத் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இலங்கை 453 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. குமார் சங்கக்கார 147 ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்யூஸ் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். ஜேம்ஸ் அன்டர்சன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

122 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 267 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இரணடாவது இனிங்ஸில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் நாயகனாக ஜேம்ஸ் ரூட் தெரிவானார், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►