இலங்கை போக்குவரத்துச் சபையினால் கிழக்கு மாகாணத்தில் முதலாவது சொகுசு பஸ் வாழைச்சேனை போக்குவரத்து சபைக்கு வழங்கும் நிகழ்வு வாழைச்சேனையில் நேற்று நடைபெற்றது.
வாழைச்சேனை போக்குவரத்து சாலை முகாமையாளர்
எம்.ஐ.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சொகுசு பஸ்ஸினை
சாலை முகாமையாளரிடம் கையளித்தார்.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர்
விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளுக்கிணங்க போக்குவரத்து அமைச்சர்
குமார வெல்கமவினால் இந்த பஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் இரவு 9.00
மணிக்கு காத்தான்குடியில் இருந்து புறப்பட்டு பாசிக்குடா வழியாக
கொழும்புக்குச் சென்று, மறுநாள் இரவு கொழும்பில் இருந்து பாசிக்குடா வழியாக
காத்தான்குடியை சென்றடையும் என்றும், இச்சேவை நாளை முதல் ஆரம்பிக்கப்படும்
என்றும் சாலை முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன்,
இணைப்பாளரான திருமதி. ருத்ரமலர் ஞானபாஸ்கரன், வாழைச்சேனை பொலிஸ்
அத்தியட்சகர் லால் செனவிரத்ன, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர்
கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 29, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
7 வது முறையாக ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கியது.
-
இங்கிலாந்தில் 15 வயது மாணவியுடன் 30 வயதான அவரது கணக்கு வாத்தியார் நாட்டை விட்டே ஓடி விட்டார்.
-
"மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதியாக வருவதற்கு சட்டம் இடமளிக்காது" - இவ்வாறு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெ...
No comments:
Post a Comment
Leave A Reply