கரந்தெனிய பொரகந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.மோட்டார் சைக்கிலொன்றும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதி நேற்றிரவு 10.45 அளவில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 18 வயதான இரண்டு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் பஸ்சின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply