blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 26, 2014

தேசிய காற்பந்தாட்ட அணிக்கு வீரர்கள் தெரிவு

இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் 26 வயதுக்கு கீழ்பட்ட தேசிய அணிக்கான வீரர்களை நாளை (27) தொடக்கம் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தெரிவு செய்யவுள்ளது.
காற்பந்தாட்ட வீரர்களை தெரிவு செய்யும் நிகழ்வு குறித்த தினங்களில் காலை 9.00 மணிக்கு கொழும்பு நகர காற்பந்தாட்ட கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

விளையாடக்கூடியவர்கள் தேவையான உபகரணங்களுடன் வந்து விளையாடுமாறு கோரப்படுகின்றனர். தேசிய காற்பந்தாட்ட அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நொக்கோலா கவசோவிக் மற்றும் பயிற்றுவிப்பாளர் சம்பத் பெரேரா ஆகியோர் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பர் என இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►