ஹட்டன் நல்லத்தண்ணி பகுதியில் 04 வயது சிறு பாலகியை 17 வயது சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply