blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Thursday, June 26, 2014

20 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தார் சொயிப் அக்தர்


20 வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தார் சொயிப் அக்தர்38 வயதாகும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சொயிப் அக்தர் 20 வயதாகும் ருபாப் என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


கைபர் பாக்துன்கவா மாகாணத்தின் ஹாரிப்பூரைச் சேர்ந்தவர் இந்தப் பெண். இவரை இன்று அக்தர் ஆர்பாட்டமில்லாத  திருமணம் செய்து கொண்டதாக துனியா தொலைக்காட்சி செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த எளிய திருமண விழாவில் அக்தரின் பெற்றோர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அக்தரின் மனைவியான ருபாப் 1994ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு கிரிக்கெட்டில் நாட்டம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அக்தர் இளம்பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தியை அக்தர் தனது ட்விட்டரில் மறுத்திருந்தார்.

அப்போதே ஹாரிப்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார் என்று செய்தி வெளியானது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►