
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் ஆகியோர் முன்னிலையில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பிரீஸ் மற்றும் மாலைதீவின் சுகாதார, மகளிர் மற்றும் ஆடவர் விவகாரங்களுக்கான அமைச்சர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இலங்கை முதலீட்டு சபை மற்றும் மாலைதீவு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிவற்றிற்கு இடையிலும் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் காப்பாற்றுதல் நடவடிக்கைகளை இணைப்பதற்கான மற்றுமொரு உடன்படிக்கையில் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த உடன்படிக்கையின் ஊடாக கடலில் அனர்த்தங்களுக்கு இலக்காகின்றவர்களை தேடிக் கண்டுபிடித்தல் மற்றும் காப்பாற்றும் செயற்பாடுகளை இணைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மாலைதீவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூமை நேற்று சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு தலையீடுகளை அனுமதிக்க முடியாதென மாலைதீவு ஜனாதிபதி கூறியுள்ளார்.
சர்வதேச சவால்களுக்கு மத்தியில் தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்த சந்திப்பின்போது மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply