
சீனாவில் உள்ள ஷாங்காய் என்ற நகரில் வாழும் இரண்டு வயது செங் செங், தினமும் பால் குடிப்பதற்கு பதில் பீர் குடிப்பதாக அவனுடைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.
இந்த சிறுவன் பத்து மாத குழந்தையாக இருக்கும்போது அவனுடைய தந்தை குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த பீரை குடித்ததாகவும், அதுமுதல் தினமும் பால் குடிக்காமல் பீர் பாட்டிலை கேட்டு அடம்பிடிப்பதாகவும் அவனுடைய பெற்றோர்கள் கூறுகின்றனர்.
நாள் ஒன்றுக்கு இரண்டு பீர் பாட்டிலை இந்த சிறுவன் குடிப்பதாக அவனுடைய பெற்றோர் கூறுகின்றனர்.
பீர் குடிப்பதால் சிறுவனின் உடலில் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை எனினும், அவனுடைய கண்கள் எப்பொழுதுமே போதை நிறைந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது மருத்துவர்களின் கண் காணிப்பில் இருக்கும் சிறுவனுக்கு பீர் பாட்டிலை எப்படி மறக்க வைப்பது குறித்து அவனுடைய பெற்றோர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply