இலங்கைக் கடற்பரப்பிற்குள்
அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மன்னார்
மற்றும் நெடுந்தீவுக் கடற்பகுதிகளில் வைத்து கைதுசெய்யப்பட்ட தமிழக
மீனவர்கள் 64 பேர் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி கடந்த
வியாழக்கிழமை நெடுந்தீவு கடலில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த 24 பேரை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று இன்று
புதன்கிழமை விடுதலை செய்தது.
அவர்கள் பயன்படுத்திய 6 படகுகளும் வலைகளும் நீதிமன்றப் பிடியிலேயே வைக்கப்பட்டுள்ளன.
தமிழகம்,
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டணத்திலிருந்து 6 படகுகளில் வந்த 24
மீனவர்களையும் நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடந்த
வியாழக்கிழமை அதிகாலை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
இதேவேளை கடந்த 18 ஆம் திகதி மன்னார் கடற்பரப்பில் வைத்து கைதான 22 இந்திய மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புக்கமைய மன்னார் நீதிமன்று விடுவித்துள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply