கிளாலிக் கடற்கரை மணலில் புதைந்திருந்த மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த பாடசாலை மாணவனின் கால் முழங்காலின் கீழ் அகற்றப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
கிளாலிப் பகுதியில் நேற்றுச் சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த உதய குமார் கவிதரன் (வயது 14) என்ற பாடசாலை மாணவனின் வலது கால் முழங்காலின் கீழ் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
கிளாலி மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் குறித்த சிறுவன், பாடசாலை விடுமுறை தினமாகிய நேற்றுச் சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிளாலிக் கடற் கரையில் விளையாடுவதற் குச் சென்றுள்ளார்.
கடற்கரை ஓரமாக சிறிது தூரம் நடந்து சென்ற வேளை மணலில் புதைந்திருந்த மிதிவெடி வெடித்துள்ளது. சம்பவத்தின் போது உடனிருந்த நண்பர்கள் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது அவன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அவனை மீட்டு அருகில் இருந்த ஓட்டோ மூலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அதன் பின்னர் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் சிறுவனுக்கு முதலுதவி வழங்கிய பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவனின் வலது கால் முழங்காலுக்குக் கீழ சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாகச் சிறுவனின் பெற்றோரும் உறுதிப்படுத்தினர்.
அதேவேளை, கிளாலி பகுதியில் மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைந்து விட்டதாக மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர் கூறி வருகின்ற போதிலும் அங்கு முழுமையாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லை.
அதனால் பல பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
நைஜிரியாவில் கடத்தப்பட்ட பெண்கள் திருமணத்திற்கென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போஹோ ஹராம் ஆயதாரிகளால் கடத்தப்பட்...
-
சாவகச்சேரி நகரசபையால் 74 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொன்விழா மண்டபத்தை இன்று காலை 9.30 மணிக்கு வடக்குமாகாண முதலமைச்சர் க.வி....
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜ...
-
மாத்தளை மற்றும் பதுளை மாவட்டம் - தபால்மூல வாக்கு முடிவுகள்:
No comments:
Post a Comment
Leave A Reply