சந்தேகத்துக்கிடமான வாகனமொன்றை கடந்த சனிக்கிழமை அதிகாலை இராமநாதபுர மாவட்டம் ஒரியூர் விளக்கு வீதி திருவாதனை பகுதியில் இடைமறித்து சோதனையிட்டபோதே தங்கம் கடத்தப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்திலிருந்து 65 தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை 12 கிலோகிராம் நிறை கொண்டதாகவும் இவற்றின் பெறுமதி இந்திய பெறுமதியில் 3.34 கோடி ரூபா என்றும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலிருந்து தங்கம் கடல்மார்க்கமாகக் இந்தியாவுக்குள் கடத்திச் செல்லப்பட்டமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவற்றைக் கொண்டுசென்ற இரு இந்தியர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
No comments:
Post a Comment
Leave A Reply