எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 29, 2014
சென்னையில் இடிந்து விழுந்த கட்டிடத்திற்குள் சுமார் 100 தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அச்சம்
தமிழகத்தின் சென்னைக்கு அருகிலுள்ள முகலிவாக்கம் பகுதியிலுள்ள 11 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் சுமார் 100 பேர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை விபத்தில் உயிரிழந்த ஆந்திர தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிதியுதவி வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை டெல்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.
தரக்குறைவான கட்டுமாணப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளே இந்தியாவின் கட்டடங்கள் இடிந்து வீழக் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கூலிக்காக வர்ணம் (பெயின்ற்) பூசச் சென்ற இளைஞர் ஒருவர் அந்த வீட்டிலிருந்த மூன்று பவுண் எடை கொண்ட சங்கிலியை திருடிய சம்பவம் ஒன்று அண்மையில்...
-
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவன் ஒருவர் விடிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகின்றது.
-
இஸ்லாமாபாத்,பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்ட விமானப்படைக்கு சொந்தமான விமானம் நொறுங்கி விழுந்ததில் 2 விமானிகள் இறந்தனர். தலைநகர் இஸ்லாமா...
-
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா தங்கப்பதக்...
No comments:
Post a Comment
Leave A Reply