பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் வைத்தியர்களின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சையின் போது குடல் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த பரிதாப சம்பவம் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இதில் வெஸ்மோலா தோட்டதைச் சேர்ந்த 32 வயதான தமிழ் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணிற்கு முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துள்ளது. இரண்டாவது குழந்தை பேறுக்காக அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலே மருத்துவர்களின் கவனக்குறைவான செயற்பாட்டால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,
குழந்தைப் பேறுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தையை அறுவை சிகிச்சை மூலமே வெளியில் எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அதற்கான அனுமதியையும் என்னிடம் பெற்றுக்கொண்டு அறுவை சிகிச்சையை வைத்தியர்கள் மேற்க்கொண்டனர். அறுவை சிகிச்சை முடிவடைந்த பின்னர் குழந்தையும் தாயும் விடுதிக்கு கொண்டு வரப்பட்டனர்.
விடுதிக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் மனைவியின் வயிறு வீங்க ஆரம்பித்தது.இது குறித்து மருத்துவர்களிடம் நான் கூறிய போது அதற்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
பின்னர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து மனைவியை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு கொண்டு சென்றனர். எவ்வாறு மனைவியின் நிலை உள்ளது என விபரங்களை கேட்ட போது சரியான தகவல்களை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை என குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதது.
No comments:
Post a Comment
Leave A Reply