மட்டக்களப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளில் தபாலகங்கள் உடைத்து கொள்ளையிடப்பட்டமை
உள்ளிட்ட பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது
செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் கல்முனை பகுதியில் களுவாஞ்சிக்குடி பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிக்குடி, களுதாவளை, காத்தான்குடி, கல்லாறு மற்றும் அம்பாறை மாவட்டதின் பல இடங்களில் சந்தேகநபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply