நிறுவனம் ஒன்றின் வாகனத்தில் விசேட தேவைக்குரியவர்களை நிகழ்வொன்று முடிந்து வீடுகளில் ஒப்படைக்க சென்ற சமயம் இறுதியாக வாகனத்தில் இருந்த 21 வயதுடைய சித்தசுவாதீனமற்ற யுவதியை அவ் வாகனத்தின் சாரதியான 53 வயதுடைய நபர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் நேற்று (04) வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்றைய தினம் சம்பந்தப்பட்ட நபர் வவுனியா நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்பட்டார்.
இதன்போது சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply